வல்வை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்த சிவாஜிலிங்கம் - Yarl Voice வல்வை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்த சிவாஜிலிங்கம் - Yarl Voice

வல்வை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்த சிவாஜிலிங்கம்வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது 02.08.2021
வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது l.

02.08.2021
வல்வைப் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவேந்தல், வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் புடகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களையும் நினைவு கூரப்பட்டது.

இந்திய அரசின் வல்வைப்படுகொலை ஆரம்ப நாள் 1989(2,3,4 ஆகஸ்ட் )32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அமைதியை நிலை நாட்டுகிறோம் என வந்த பிராந்திய நலன் கொண்ட இந்திய அமைதிப்படை. ஈழ தேசத்தில் தன் முகமூடியை அப்பட்டமாக கழட்டி எறிந்த மேலும் ஒருநாள் வல்வைப்படுகொலை நாள்.
1989 ம் ஆண்டு 08 ம் மாதம் 02 ம் திகதி வல்வெட்டித்துறையில் புலிகளுக்கும் இந்திய ஆக்கிரமிப்பு படைக்கும் நடந்த மோதலில் மோதலில். 09 இந்திய இராணுவம் பலியானதுக்காக 2 ம், 3 ம், 4 ம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் மிக கோரத்தாண்டவம் ஆடியது இந்திய இராணுவம்.
63 பொதுமக்கள் கொல்லப்பட்டும்
100 க்கு மேற்பட்ட மக்கள் பெரும் காயப் படுத்தப்பட்டும்
123 வீடு முற்றாக எரித்து சாம்பலாக்கியும்
45 கடைகள் முற்றாக சூறையாடப்பட்டும்
175 மீன் பிடி வள்ளங்கள் முற்றாக எரித்தும்
முழு வல்வெட்டித்துறையும் சுடுகாடாக்கியது இந்திய இராணுவம்.
இந்நாளில் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post