போரால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லை மாவட்டத்திற்கு சுரேன் இராகவனால் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு - Yarl Voice போரால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லை மாவட்டத்திற்கு சுரேன் இராகவனால் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு - Yarl Voice

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லை மாவட்டத்திற்கு சுரேன் இராகவனால் 4 மில்லியன் நிதி ஒதுக்கீடு2021 ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் 10 மில்லியன் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 4 மில்லியன் ரூபா நிதியினை போரினால் அதிகம் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஒதுக்கியுள்ளார். 

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 11 பாடசாலைகளில் Smart Classrooms அமைப்பதற்கும் 20 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமத்திற்கு பொதுக் கிணறு அமைப்பதற்கும் மீனவர்களின் தேவைக்கு சிறிய வெளிச்ச வீடு உள்ளிட்ட செயற்திட்டங்களுக்காக இந்த 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும்  கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கான அனுமதி திறைசேரியிலிருந்து கிடைத்ததும் அவை தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு பகிரப்படும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post