உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 2 திகதிவரை விளக்கமறியல் - Yarl Voice உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 2 திகதிவரை விளக்கமறியல் - Yarl Voice

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 64 பேருக்கும் 2 திகதிவரை விளக்கமறியல்



உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன்; தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் பலத்தபாதுகாப்பு மத்தியில் இன்று வியாழக்கிழமை (19) மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 2 ம் திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த  65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர் இரு வௌ;வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து  விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64  பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த  வௌ;வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவார்களை பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் இன்று வியாழக்கிழமை (19) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்காக அழைத்துவரப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 2 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

இதேவேளை குறித்த சந்தேகநபர்களை பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post