யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக இந்த விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தில் பயனித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment