டெல்டா கொரோனா வைரஸ் காட்டுதீ போல பரவல் - நாட்டை முடக்குமாறு மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் வேண்டுகோள் - Yarl Voice டெல்டா கொரோனா வைரஸ் காட்டுதீ போல பரவல் - நாட்டை முடக்குமாறு மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் வேண்டுகோள் - Yarl Voice

டெல்டா கொரோனா வைரஸ் காட்டுதீ போல பரவல் - நாட்டை முடக்குமாறு மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் வேண்டுகோள்
டெல்டா கொரோனா வைரஸ் காட்டுதீயை போல பரவிவருவதன் காரணமாக நாட்டை தற்காலிகமாக முடக்குவது அவசியம் என மருத்துவநிபுணர்களும் சுகாதார பணியாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரசாங்கம் தற்காலிகமாக நாட்டை முடக்குவது குறித்தவர்  சிந்திக்கவேண்டும்  என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில்   போக்குவரத்து கட்டுப்பாடுகளை மாத்திரம் விதிப்பதால் பயணில்லைஎன அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை மருத்துவ பேரவை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசதாதிமார் சங்கம்உட்பட பல அமைப்பு முடக்கல்நிலைமையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயுமாற வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதேவேளை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிசிச்சை அளிப்பதற்கான மருத்துவமனைகளின் திறன் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post