தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நதியா - Yarl Voice தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நதியா - Yarl Voice

தடுப்பூசி போட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை நதியாநடிகை நதியா முழுவதுமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட போதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

90-களில் ட்ரெண்ட் செட்டராக திகழ்ந்தவர் நதியா. குறிப்பாக பல ஃபேஷன் இலக்குகளை நிர்ணயித்தவர். 

’எவர் யங்’ என்ற வார்த்தை இவருக்கு கச்சிதமாக பொருந்தும். தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நதியா, அவ்வப்போது நல்ல கதைகளில் மட்டும் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். 

கடந்த மே மாதமே தனது இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நதியா, அதனை சமூக வலைதளம் மூலமாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

 அதோடு உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரைவில் தடுப்பூசி போடுங்கள் எனவும் ரசிகர்களை அறிவுறுத்தினார்.

தவிர நதியா தற்போது த்ரிஷ்யம் படத்தில் தெலுங்கு ரீமேக்கான ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post