யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரை பின்னாள் வந்து மோதித்தள்ளிய டிப்பர் - சம்பவ இடத்திலேயே மனைவி பலி ! கணவர் காயம் - Yarl Voice யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரை பின்னாள் வந்து மோதித்தள்ளிய டிப்பர் - சம்பவ இடத்திலேயே மனைவி பலி ! கணவர் காயம் - Yarl Voice

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியரை பின்னாள் வந்து மோதித்தள்ளிய டிப்பர் - சம்பவ இடத்திலேயே மனைவி பலி ! கணவர் காயம்கோப்பாய் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின்னால் வந்த டிப்பர் மோதியதில்  இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  
 
கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் மோட்டார் சைக்கிள்  கொண்டிருந்த போது (கைதடிப் பக்கமாக - இறைச்சிக்கடைக்கு அண்மையில்)   பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.

 மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் விழுந்ததில்  டிப்பர் சில்லினுள் அகப்பட்டு தலை பகுதி நசுங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதில்  35 வயது மதிக்கத்தக்க  இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். 

கணவர்  மற்றைய பக்கமாக  விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். இவர் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார். 

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post