அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களில் கைவக்கும் திட்டமில்லை – அமைச்சர் டலஸ் - Yarl Voice அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களில் கைவக்கும் திட்டமில்லை – அமைச்சர் டலஸ் - Yarl Voice

அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்களில் கைவக்கும் திட்டமில்லை – அமைச்சர் டலஸ்

 


கொரோனா வைரசிற்கு மத்தியில் அரசாங்க தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் குறைப்பை மேற்கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அலகபெரும இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஒருவர் இதற்கான வேண்டுகோளை விடுத்தார்,எனினும் இது குறித்த யோசனைகள் எதுவும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நிதியத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் அரச தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கதிட்டமிட்டுள்ளது என ஊடகங்களில் வெளியான தகவல்களை தான் நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post