இராணுவச் சீருடையுடன் ஆயுதங்களுடன் வந்தவர்கள் பொன்னாலை மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் - Yarl Voice இராணுவச் சீருடையுடன் ஆயுதங்களுடன் வந்தவர்கள் பொன்னாலை மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் - Yarl Voice

இராணுவச் சீருடையுடன் ஆயுதங்களுடன் வந்தவர்கள் பொன்னாலை மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்
இராணுவச் சீருடையில், இராணுவ வாகனத்தில் வந்த 10 இற்கு மேற்பட்டவர்கள் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

நான்   சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராமமே மக்கள் நடமாட்டம்  இன்றி வெறிச்சோடியிருந்தது. படைச் சீருடை அணிந்திருந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நின்றனர். அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர். 

அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய நான் மக்களைத் தாக்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினேன்.  நான் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 நான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தேன். இதையடுத்து படைச் சீருடை அணிந்தவர்கள் ஓடித்தப்பியுள்ளனர். 

12 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் இதுவரை பொலிஸார் வருகைதரவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post