யாழில் இராணுவத்திடமிருந்து விடுவித்தாக ஆளுநர் சுரேன் இராகவனால் சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதாக வர்த்தமானியில் அறிவித்தல் - வேதனையில் வலி வடக்கு காணி உரிமையாளர்கள் - Yarl Voice யாழில் இராணுவத்திடமிருந்து விடுவித்தாக ஆளுநர் சுரேன் இராகவனால் சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதாக வர்த்தமானியில் அறிவித்தல் - வேதனையில் வலி வடக்கு காணி உரிமையாளர்கள் - Yarl Voice

யாழில் இராணுவத்திடமிருந்து விடுவித்தாக ஆளுநர் சுரேன் இராகவனால் சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதாக வர்த்தமானியில் அறிவித்தல் - வேதனையில் வலி வடக்கு காணி உரிமையாளர்கள்
சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த சமயம் விடுவித்ததாக கடிதம் வழங்கிய நிலங்களை சுவீகரித்துள்ளதாக அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேனா அரசின் காலத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பெரும் விழா எடுத்து நிலத்தை விடுவிப்பதாக படம் காட்டி
நவரட்ணம் விக்னேஸ்வரன் ஆகிய எனது  23 பரப்பு காணி உட்பட பலரின்  நிலம் விடுவிப்பமாக அப்போதைய ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் சான்றிதழ் தந்தார்.

ஆனாலும் இன்றுவரை நிலம் விடுவிக்கப்படாமல் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்க எமக்கு எந்தவொரு அறிவித்தலும் வழங்காது திருட்டுத்தனமாக 2021-02-15ஆம் திகதியிடப்பட்டு காணி அமைச்சர் எஸ்.எம்சந்திரசேனா நிலத்தை சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசின் உச்ச பட்ச அராஜகத்தின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்கின்றோம். இதனால் இந்த விடயத்தை எங்கு எல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அங்கெல்லாம் கொண்டு செல்வேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post