நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கொவிட் நிலைமைக்கு அரசாங்கமே முக்கிய காரணம் - இராணுவத்தினரை வைத்து வைரஸ்பரவலை தடுக்கலாம் என நினைத்தது பெருந்தவறு - சுமந்திரன் - Yarl Voice நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கொவிட் நிலைமைக்கு அரசாங்கமே முக்கிய காரணம் - இராணுவத்தினரை வைத்து வைரஸ்பரவலை தடுக்கலாம் என நினைத்தது பெருந்தவறு - சுமந்திரன் - Yarl Voice

நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கொவிட் நிலைமைக்கு அரசாங்கமே முக்கிய காரணம் - இராணுவத்தினரை வைத்து வைரஸ்பரவலை தடுக்கலாம் என நினைத்தது பெருந்தவறு - சுமந்திரன்




நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கொவிட் நிலைமைக்கு அரசாங்கமே முக்கிய காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

கோவிட் 19 தொடர்பாக நாடு இன்றைக்கு எதிர்நோக்கியுள்ள சூழ்நிலை மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது.
நாளுக்குநாள் இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குகின்றது, தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

அரசாங்கம் மக்களிற்கு தெரிவிக்கும் தகவல் தவறானது மிகவும் குறைந்த தொகையையே அரசாங்கம் தெரிவிக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் வருவதற்கு அரசாங்கம் தான் பிரதான காரணமாக காணப்படுகின்றது.

சென்ற வருடம் இந்த தொற்று ஆரம்பமான வேளை செய்யவேண்டியதை செய்யாமல் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காகவும், வேறு அரசியல் நோக்கங்களிற்காகவும் மாறுபட்ட செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தது.

இந்த கொவிட் 19தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட செயலணி இராணுவதளபதி தலைமையில் அமைந்திருக்கின்றது.

எங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்கள் இதுவரை காலம் வரையில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும் தடுப்பூசி செலுத்துவதிலும் அனுபவம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர்.

அப்படியானவர்களின் கருத்துக்கள் அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் இராணுவத்தினரை வைத்து வைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும் நினைத்தது பெருந்தவறு.

ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது. அதற்கு என பயிற்றுவிக்கப்பட்டவர்கள்  பொது சுகாதாரபிரிவினர் அவர்களின் ஆலோசனையின்படி செயற்படவேண்டும்.

இன்றைக்கு நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு வந்திருக்கின்ற நிலையில் கூட சுகாதார பிரிவினர் நாளுக்குநாள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்,நாட்டை குறிப்பிட்ட ஒரு நீண்டகாலத்திற்கு முடக்கவேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து வெளியாகின்றது.

ஆனால் அரசாங்கம் அதற்கு செவிமடுக்காமல் தங்கள் நலனிற்காக மாறுபட்ட தீர்மானங்களை எடுத்துவருகின்றது,

சென்றவருடமே இ;ந்த தொற்று ஆரம்பமானவேளை- இதனை கட்டுப்படுத்தவதற்கு போதிய சட்டங்கள் சரியான சட்டங்களை இயற்றவேண்டும், இதற்காக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என சகல எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

 அதற்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. புதிய நாடாளுமன்றம் உருவாகி ஒரு வருடகாலமாகின்ற போதிலும் இன்னும் அவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

அரசாங்கம் அதிலே முன்னின்று செயற்பாடாதன் காரணமாக ஒரு தனிநபர் சட்டமூலத்தை நான் நாடாளுமன்றத்திலே கொண்டுவந்தேன்.
அதனையாவது நிறைவேற்றுங்கள் என நான் பல தடவை நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்க மறுகின்றது.

ஏனென்றால் அவ்வாறான சட்டமொன்றை இயற்றினால் சட்டத்தின் ஆட்சி நாட்டிலே இருக்கும், இதை குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியவர்கள் அந்த தீர்மானங்களை எடுப்பார்கள், இராணுவம் அதற்குஉதவலாம் ஆனால் தீர்மானத்தை எடுப்பவர்கள் அதற்கு உரியவர்களாகயிருக்கவேண்டும் அரசாங்கம் அதற்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு முற்றாக முடக்கப்படவேண்டும்,என்ற கருத்து சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கம் அதற்கு செவிசாய்த்து அவ்வாறான நடவடிக்கையை அமுல்படுத்தவேண்டும்.

பொதுமக்களிற்கும் ஒரு கோரிக்கை அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும் உங்களுடைய சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நீங்களாவது வீடுகளிற்கு உள்ளே முடங்கியிருங்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post