சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று (ஆகஸ்ட்.28) மாலை வெளியாகிறது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தில், நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். சந்தானத்தோடு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.
நட்சத்திர பட்டாளங்கள்நடிகை அனகா, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக இப்படத்தில் நடிக்கிறார்கள்.
எனர்ஜிடிக் காமெடியன் யோகி பாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என படத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இடம்பெற்றுள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் டைம் மெஷினை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'பேர் வைச்சாலும் வைக்காம' பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமேக் செய்துள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கெனவே இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்றும் வெளியாகியிருந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.28) மாலை புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிடுகிறது.
Post a Comment