,யாழில் இராணுவம் இரத்ததானம் - Yarl Voice ,யாழில் இராணுவம் இரத்ததானம் - Yarl Voice

,யாழில் இராணுவம் இரத்ததானம்கொரோணா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குருதி வழங்கும் இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு குருதியை வழங்கினர்.

குறித்த குருதியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா முன்னெடுத்துள்ளார்.

குருதி வழங்கும் நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி,  வைத்திய அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post