நாடு முடக்கப்பட்ட பின்னர் அதிதியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு - உரிய நடவடிக்கை எடுக்க நடனேந்திரன் வலியுறுத்து - Yarl Voice நாடு முடக்கப்பட்ட பின்னர் அதிதியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு - உரிய நடவடிக்கை எடுக்க நடனேந்திரன் வலியுறுத்து - Yarl Voice

நாடு முடக்கப்பட்ட பின்னர் அதிதியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு - உரிய நடவடிக்கை எடுக்க நடனேந்திரன் வலியுறுத்து
நாடு முடக்கம் அறிவித்தல் வெளியான சில நிமிடங்களில் எமது பிரதேசத்தில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக மக்கள் தெரிவித்தனர்.

 இந்த நிலைமையை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரிசெய்து அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்க்க வேண்டும் என்று யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவுக்கும் போது 

மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளும் தங்குதடையின்றி இடம்பெற வேண்டும் . 

சுகாதார அறிவுறுத்தலுக்கு ஏற்ப அரசு நாட்டை முடக்கியிருக்கிறது. இந்த காலப் பகுதியில் மக்கள் சரியாக அதனை கடைப்பிடிக்க வேண்டும். 

அதேநேரத்தில் மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களுக்கான தட்டுப்பாடு இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது. பொருள்கள் கிடைக்கக் கூடியவாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் சேவையைச் செய்ய வேண்டும்.

நாடு முடக்கப்படும் அறிவித்தல் வெளியான சில நிமிடங்களில் இந்தப் பிரதேசங்களில் சீனி, கோதுமை மா,  மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவியது. கடைகளுக்கு கொள்வனவு செய்யச் சென்ற மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாது திரும்பிச் சென்றனர். வியாபார நிலையங்களில் பொருள்கள் இருந்தும் அதனை பதுக்கி வைத்துள்ளார்களா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தகுந்த சேவையினை வழங்கி அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post