வரும் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் துவங்கவுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக 20 போட்டியாளர்கள் பட்டியலில் இருப்பதாகவும், அதில் இதுவரை 16 போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
இவர்களை ஒருவாரம் மட்டும் தனிமையில் வைத்திருக்க பிக்பாஸ் குழு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஒரு சில பிரபலங்கள் சேர்ந்து இருக்கும் குரூப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி ஆகியோர் உள்ளனர்.
எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்கள் நான்கு பேரும் ஒரே இடத்தில் இருப்பதால் நிச்சயம் இவர்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாக தான் இருப்பார்கள் என்று உறுதி செய்துள்ளனர்.
இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களில் கண்மணியை தவிர மற்றவர்கள் அனைவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளனர் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது சன் டிவியின் பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
ஏனென்றால் கடந்த சீசனில் சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சென்று வந்துள்ள நிலையில், அவருக்கு திரைத்துறையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பிறகு தற்போது கண்மணியும் பிக்பாஸ் சீசன் 5ல் செல்ல உள்ளதால் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை குறித்த அதிக எதிர்பார்ப்புடன் காத்துள்ளன
எனவே பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றிய முழு விவரமும் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment