அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் மருதனார்மடத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் - Yarl Voice அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் மருதனார்மடத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் - Yarl Voice

அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில் மருதனார்மடத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக் அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும்நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் முன்மொழிவுக்கமைய யாழ் மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள மருதனார்மடம் நகரத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் களவிஜயமொன்றை நேற்று (31.08.2021) மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் உடுவில் பிரதேசத்துக்கான இணைப்பாளர் சசீந்திரா மற்றும் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் த. துவாரகன் ஆகியோருடன் இத்திட்டம் தொடர்பான கருத்தாய்வுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை இத்திட்டத்தின்கீழ், கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களால் முன்மொழியப்பட்ட வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் ஆகிய 6 பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு முதற்கட்டமாக வேலணை, கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் ஆகிய 4 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருபிரதேசத்தை பல்பரிமாண நகராக்குவதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.20

0/Post a Comment/Comments

Previous Post Next Post