ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை - Yarl Voice ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை - Yarl Voice

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடை




கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைப்பினால் கைப்பற்றப்பட்டது. ஆப்கன் கைப்பற்றப்பட்டபோதே அங்கு கலை, கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போல், பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியமில்லை என தாலிபன் கலாசார அமைப்பின் துணைத் தலைவர் அகமதுல்லா வாசிக் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த அறிவிப்புக்கு சர்வதேச அளிவில் கண்டனக் குரல்கள் எழுந்தன.தாலிபான் எச்சரிக்கை அதைதொடர்ந்து, தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. 

போட்டிகளின்போது சியர் லீடர்ஸாக பெண்கள் நடனமாடுவது, மைதானத்தில் பார்வையாளராக பெண்கள் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால் இந்த தடை உத்தரவை தாலிபான் பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு தடைஆப்கன் பத்திரிக்கையாளர் ட்வீட்இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகவியலாளர் ஃபாவத் அமன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"

 தாலிபான் மைதானத்தில் பெண்கள் நடனமாடுவதாலும், பார்வையாளராக இருப்பதாலும் ஐபிஎல் போட்டியை ஒளிப்பரப்பக் கூடாது என எச்சரித்துள்ளனர். 

தாலிபான்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடைவிதித்திருப்பது மிகவும் நகைப்பிற்குரியது. " எனப் பதிவிட்டுள்ளார்.

.

0/Post a Comment/Comments

Previous Post Next Post