யாழில் மின்தகன சாலையை உடனடியாக அமைப்பது சாத்தியமில்லை - யாழ் அரச அதிபர் - Yarl Voice யாழில் மின்தகன சாலையை உடனடியாக அமைப்பது சாத்தியமில்லை - யாழ் அரச அதிபர் - Yarl Voice

யாழில் மின்தகன சாலையை உடனடியாக அமைப்பது சாத்தியமில்லை - யாழ் அரச அதிபர்




புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ். மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது.

முதலில் தகனம் செய்யும்போது ஒரு நாளில் மூன்று சடலங்கள் தகனம்செய்யப்பட்டது. பின்னர் அது நான்கு, ஐந்து என அதிகரிக்கப்பட்டது. அதுவும் பழுதடைந்த நிலையில்தான் இயங்கிவருகிறது.

மேலதிகமாக சடலங்கள் அதிகரித்தபோது அவை வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அநுராதபுரத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தகனம் செய்வதற்காக மின்தகனம், எரிவாயு போன்ற தகனங்கள் தான் செய்யவேண்டும் என சுகாதாரதரப்பினர் அறிவுறுத்துகின்றனர்.

கொரோனாத் தொற்றினால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் விறகுகளை கொண்டு எரியூட்டுவதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை.

அந்தவகையில் பொதுமக்கள் நாட்டில் அமுலாக்கப்பட்டு இருக்கும் ஊரடங்குசட்டத்தினை துஸ்பிரயோகம் செய்யாது தங்களையும் பாதுகாத்து சமூகத்தினையும் பாதுகாக்கவேண்டும்” என தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post