அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகளை சுபோதனி அறிக்கையின் ஒரு பகுதியாகக் கருதி ஒரே தடவையில் சம்பளத்தை வழங்குவது குறித்து சுற்றறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஊடாக கலந்துரையாடலை மேற்கொள்ள வாய்ப்பு வழங்குமாறு கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment