ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம் பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - Yarl Voice ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம் பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - Yarl Voice

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம் பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் நலன்களுக்காக மாத்திரம்  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எஸ்.டபிள்யூ.டஆர்.டி. பண்டார நாயக்கவின் 62 வது சிரார்த்த தினத்தை நினைவுகூரும் நிகழ்வுகள் ஹொரகொல்ல சமாதியில் இடம்பெற்ற வேளை அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை எங்கள் குடும்பமே ஏற்பாடு செய்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சுதந்திரக் கட்சி அரசியல் ஆதாயத்திற்காக மாத்திரம் பண்டாரநாயக்கவின் பெயரைப் பயன்படுத்துகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன ஒரேயொரு முறை மாத்திரம் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு விஜயம் மேற்கொண்டார் என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்கவின் பெயரை பயன்படுத்துவதற்காக சமாதிக்கு விஜயம் மேற்கொள்ளக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post