ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார் - ரணில் விக்ரமசிங்க - Yarl Voice ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார் - ரணில் விக்ரமசிங்க - Yarl Voice

ஐக்கிய தேசிய கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார் - ரணில் விக்ரமசிங்க
இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படவுள்ளதுடன், அவற்றுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னைய ஐக்கிய தேசிய கட்சி தற்போது இல்லை. தற்போது புதிய ஐக்கிய தேசிய கட்சியே உள்ளது.

எனவே ஏனைய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்களுடன் இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்ற ஐக்கிய தேசிய கட்சி அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளது.

 எங்கள் கட்சி தேசத்தை கட்டியெழுப்ப குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் இலங்கையை ஒரு சிறந்த தேசமாக மாற்றுவதே எங்கள் நீண்டகால திட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

2020 இல் நாங்கள் பெரும் பின்னடைவை சந்தித்தோம். இருப்பினும், நாங்கள் புதிதாக திரும்பி வந்துள்ளோம்.

 பாரம்பரிய அரசியலை நிராகரிக்கும் மக்களின் அபிலாஷைகளுடன் நாங்கள் செல்ல முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post