மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜியின் எமோஷனல் பதிவு! - Yarl Voice மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜியின் எமோஷனல் பதிவு! - Yarl Voice

மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜியின் எமோஷனல் பதிவு!



இந்திய அணியின் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழும் 35 வயதான ஷிகர் தவான், அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளது.

ஷிகர் தவானுடன் விவாகரத்து ஆகியிருப்பதாக அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார். 

ஷிகர் தவான் இதனை உறுதிப்படுத்தாத நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பாலோயர்களுக்காக உருக்கமான பதிவின் மூலம் ஆயிஷா தனது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்.

ஆயிஷா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவார். ஆயிஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் அவரின் முதல் கணவரை பிரிந்து 2012ம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார்.

 இருவருக்கும் சோராவர் எனும் மகன் உள்ளார். மேலும் ‘ஆயிஷா தவான்’ என்ற அவருடைய தனிப்பட்ட சமூக ஊடக கணக்கையும் அவர் அழித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் நண்பர் வட்டத்தில் இருந்த ஆயிஷாவை, ஷிகர் தவான் பேஸ்புக்கில் முதல் முறையாக பார்த்தார். அவருடைய புகைப்படங்களை பார்த்து வயப்பட்டு பின்னர் அறிமுகமாகி அது திருமணம் வரை சென்றது. 

முதலில் தவானின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் தவான் அவர்களை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்.

ஆயிஷாவின் குடும்பத்தினர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கின்றனர்.

தவானின் மனைவி ஆயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில் “முதலில் விவாகரத்து என்பது ஒரு அழுக்கான வார்த்தை என, இரு முறை விவாகரத்து ஆகும் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். 

வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன்.

 முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

சுயநலக்காரியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதி கொடுத்ததாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post