யாழ். பல்கலையில் மனித உயிரியல் விஞ்ஞானத் துறையை ஸ்தாபிக்க ஆணைக்குழு அனுமதி! - Yarl Voice யாழ். பல்கலையில் மனித உயிரியல் விஞ்ஞானத் துறையை ஸ்தாபிக்க ஆணைக்குழு அனுமதி! - Yarl Voice

யாழ். பல்கலையில் மனித உயிரியல் விஞ்ஞானத் துறையை ஸ்தாபிக்க ஆணைக்குழு அனுமதி!யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் நான்காவது புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத் துறை உள்வாங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவையின் பரிந்துரையுடன், பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரத்துடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சமர்பிக்கப்பட்ட முன்மொழிவு கடந்த மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தர நிர்ணயக் குழு மற்றும் முகாமைத்துவக் குழு ஆகியவற்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உயிரியல் விஞ்ஞானத் துறைக்கான முன்மொழிவு அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின், வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post