கொரோனா பேரிடர் காரணமாக நாளாந்தம் மரணங்கள் அதிகரித்த நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைகின்ற நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் இறுதிக்கிரிகைகளினை தனது சொந்தப் பணத்தில் செய்து கொடுப்பதற்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் முன்வந்துள்ளார்.
இவ்வகையில் கொரோனா தொற்றுக்காரணமாக மரணமடைகின்ற நபரின் குடும்ப வறுமை நிலையினை அப் பகுதி கிராமசேவையாளரின் உறுதுpப்படுத்தல் கடிதத்துடன் நாவலர் வீதியில் உள்ள தியாகி அறக்கொடை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களையோ அல்லது யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.
கொரோன தொற்றுக் காரணமாக மரணமடைந்தவரின் இறுதிக் கிரியைகளை நாடாத்துவதற்குரிய குடும்ப சூழ்நிலை இல்லையே உறுதிப்படுத்தப்படுமிடத்து இறுதிக்கிரியைக்கான போக்குவரத்து வசதி, பிரேதபெட்டி, தகனத்திற்குரிய கட்டணம் உட்பட அனைத்தையும் தியாகி அறக்கொடை நிறுவனம் செய்து கொடுக்கும்.
Post a Comment