பாகிஸ்தானில் புத்தரின் சிலைகள் தூபிகள் அழிக்கப்படுவது குறித்து இலங்கை சீற்றம் வெளியிட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் நிராகரித்துள்ளது.
பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய சில கட்டிடங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் 2020 இல் இடம்பெற்றது. அது ஒரு தனிப்பட்ட சம்பவம் என இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் உரிய பதில் நடவடிக்கையை எடுத்துள்ளது என தூதரகம் தெரிவித்துள்ளது.
அனைத்து மத வழிபாட்டிடங்களின் புனிதத் தன்மையையும் பாகிஸ்தான் முக்கியமானதாகக் கருதுகின்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகங்கள் போலிச் செய்திகளை வெளியிடுவது குறித்து உறுதியாக உள்ளன எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment