அரச நிறுவனங்களுக்கு அவசியமான 164 வாகனங்கள்; காவற்துறைக்கு 150 உந்துருளிகள் வழங்கி வைப்பு - Yarl Voice அரச நிறுவனங்களுக்கு அவசியமான 164 வாகனங்கள்; காவற்துறைக்கு 150 உந்துருளிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

அரச நிறுவனங்களுக்கு அவசியமான 164 வாகனங்கள்; காவற்துறைக்கு 150 உந்துருளிகள் வழங்கி வைப்பு




துறைசார் அலுவல்களுக்குத் தேவையான நோயாளர் காவு வண்டிகள் 50, தண்ணீர் கொள்கலன் வண்டிகள் 52, டபள் கெப் ரக வாகனங்கள் 62 உள்ளிட்ட -

164 வாகனங்களை, அவற்றுக்கு உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. 

இதன்படி - சுகாதார அமைச்சு மற்றும் ‘ சுவசெரிய’சேவைகளுக்கு 50 நோயாளர் காவு வண்டிகள் வண்டிகள் வழங்கப்பட்டதோடு,

வனஜீவராசிகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுக்கு, தண்ணீர் கொள்கலன் வண்டிகள் மற்றும் டபள் கெப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டன. 

அமைச்சர்களான ஜனக பண்டார தென்னகோன், கெஹெலிய ரம்புக்வெல்ல, சி. பீ. ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

இதேவேளை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் அன்பளிப்புச் செய்யப்பட்ட 150 உந்துருளிகளைக் காவற்துறைத் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. 

அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த உந்துருளிகள் - இலங்கைக் காவற்துறைத் திணைக்களத்தின் போக்குவரத்துச் சேவைக்குப் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்த உந்துருளிகளை - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர மற்றும் காவற்துறை மா அதிபர் சி. டீ. விக்கிரமரத்ன ஆகியோரிடம் நான் நேற்று கையளித்தேன். 

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா மற்றும் காவற்துறைத் திணைக்களத்தின் சிரேஷ்ட தலைவர்கள், இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post