கடல் வழியாகவெளிநாடுகளிற்கு செல்ல முயன்ற 19 பேர் சிலாபத்தில் கைது! - Yarl Voice கடல் வழியாகவெளிநாடுகளிற்கு செல்ல முயன்ற 19 பேர் சிலாபத்தில் கைது! - Yarl Voice

கடல் வழியாகவெளிநாடுகளிற்கு செல்ல முயன்ற 19 பேர் சிலாபத்தில் கைது!சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக  தப்பிச்செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 19 பேரை கடற்படையினர் இன்று காலை சிலாபம் கரையோரப் பகுதியில் வைத்து விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்துள்ளனர்.
ஒரு வேனையும் கடற்படையினர் இதன் போது கைப்பற்றியுள்ளனர்.
கடல் வழிகளில் இருந்து உருவாகும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் கடற்படையினர் கரையோரப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று காலை சிலாபத்தில் வேன் ஒன்றை சோதனையிட்ட கடற்படையினர் வேன் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 19 பேர் கொண்ட குழுவை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆண்கள், ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post