மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்” - நியூசிலாந்து வெற்றி குறித்து சச்சின்! - Yarl Voice மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்” - நியூசிலாந்து வெற்றி குறித்து சச்சின்! - Yarl Voice

மீண்டும் ஒருமுறை நம் நெஞ்சங்களை வென்றுள்ளனர்” - நியூசிலாந்து வெற்றி குறித்து சச்சின்!நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் வெற்றியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர்.
“படு அற்புதமான கிரிக்கெட் ஆட்டம் இது.

 நியூசிலாந்து அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்லாது நம் இதயங்களை மீண்டும் ஒருமுறை வென்றுள்ளது. மிட்செல் அற்புதமாக விளையாடினார். அவருக்கு கான்வே மற்றும் நீஷம் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். இந்த ஆட்டத்தில் சில தருணங்கள் எனக்கு 2019 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவுப்படுத்தியது” என சச்சின் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post