கொரோனா தொற்றுக்காக வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! - Yarl Voice கொரோனா தொற்றுக்காக வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! - Yarl Voice

கொரோனா தொற்றுக்காக வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பாரதூரமான நிலைமை என்றும் விரைவில் கவனிக்கப்பட வேண்டும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை சுவாச சிகிச்சை நிபுணரான வைத்தியர். சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிதமான அளவில் இருந்தபோதிலும், கடந்த இரண்டு நாட்களில் சற்று அதிகரித்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணிக்கும் வகையில் மக்களின் பொறுப்பற்ற நடத்தையே தொற்றாளர்களின் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றாளர்களை குறைப்பது மிகவும் முக்கியமானது என்றும், சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதே அதற்கு ஒரே வழி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post