வலிவடக்கு காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice வலிவடக்கு காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் - Yarl Voice

வலிவடக்கு காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்! அமைச்சர் டக்ளஸ்
வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் படிப்படியாக காணிகளை விடுவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் மீன்பிடித்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி அல்லாத மக்களுக்கு அரச நிதியில் பெற்றுக் கொடுக்கப்பட்ட 186 பேரினது  காணிகளின் உறுதிப்பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில் வலி வடக்கில் மக்களுடைய சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேசினேன் அவர் படிப்படியாக விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது நிரந்தர நியமனம் கிடைக்காத வடக்கு சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினேன்

வடக்கு மாகாணசபையில்  சுமார் 900 க்கும் மேற்பட்ட நிரந்தர நியமனம் அல்லாத சுகாதார தொண்டர்களின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தகுதியற்றவர்கள் இணைத்துக் கொண்டதான குற்றச்சாட்டுகள் எழுந்தது.


புதிய தெளிவான பாரபட்சமற்ற தேர்வின் மூலம் சுகாதார தொண்டர்களை நிரந்தர நியமனத்துக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் என புதிய ஆளுநருடன் பேசினேன்.

மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் எமது மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கடற்தொழில் அமைச்சர் யாழ்ப்பாணம் ரோலர் படகு மீனவர்களிடம்  நாள் ஒன்றுக்கு ரூபா 5ஆயிரம் பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவித்தார்.

அவரது கருத்தின் எதிரொலியாக குருநகர்  மற்றும் பருத்தித்துறை மீனவர்கள் இணைந்து அவருடைய கொடும்பாவியை எரித்ததோடு ஒருநாள் கர்த்தாலையும் மேற்கொண்டானர்.


குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எனது பெயரை குறிப்பிடாமல் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர் நான் தவறு விட்டிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.

மேலும் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் இந்திய படகுகளை கைது செய்யும் மற்றும் துரத்தம் செயற்பாடுகளை  தொடர்ச்சியாக எமது கடற்படையினர் மேற்கொள்வர்.

ஆகவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆசியுடன் மக்களுக்கு தேவையான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post