மிஸ் கேரளாவின் கடைசி வீடியோ - துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை முயற்சி - Yarl Voice மிஸ் கேரளாவின் கடைசி வீடியோ - துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை முயற்சி - Yarl Voice

மிஸ் கேரளாவின் கடைசி வீடியோ - துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை முயற்சிபிரபல மாடலிங் மற்றும் மிஸ் கேரளா, தென்னிந்திய அழகியுமான அன்சி கபீர் கார் விபத்தில் உயிரிழந்தார்.  அவர் இதை உணர்ந்து தானோ என்னவோ,  இது போவதற்கான நேரம் என்கிற அர்த்தத்தில்,   ஒரு காட்டு வழியில் நடந்து சென்று போய் வருகிறேன் என்று கையசைத்து செல்வது போல் கடைசியாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோ,  அவரது நண்பர்களையும் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறது.  துக்கம் தாங்காமல் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார் அன்சியின் தாய்.

கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் நகரின் வைட்டிலா பகுதிகளில் நடந்த  கோர விபத்தில் தென்னிந்திய அழகி அன்சி கபீர்,   கேரள அழகி அஞ்சனா ஷாஜன்  இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அன்சி கபீர் திருவனந்தபுரத்தில் ஆலம்கோடு பகுதியை சேர்ந்தவர்.  அஞ்சனா சாஜன் திருச்சூரை சேர்ந்தவர். கடந்த  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள அழகிப்போட்டியில் அன்சி கபீர் முதலிடம் பிடித்துள்ளார் .   அந்த போட்டியில் அஞ்சனா சாஜன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.   இதன் பின்னர் தென்னிந்திய அழகிப் போட்டியிலும் பங்கேற்று அன்சி கபீர் மகுடம் சூடி இருக்கிறார்.   தோழிகளான அன்சி கபீர் - அஞ்சனா  சாஜன் இருவரும் மாடலிங் துறையில் கலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு போட்டோ ஷூட் சம்பந்தமாக தங்களுக்கு சொந்தமான போர்ட் பியோ காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றிருக்கிறார்கள்.   அப்போது அதிவேகமாக கார் சென்றதால் அங்குள்ள மரத்தில் மோதி பயங்கர விபத்துக் குள்ளாகி அன்சி - அஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அவருடன் பயணித்த மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   முதற்கட்ட விசாரணையில் அங்கு உள்ள பொது மக்களிடம் விசாரித்த போது,  கார் அதிவேகமாக வந்தது.   கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  குறுக்கே ஒரு பைக் வந்தபோது திடீரென்று பிரேக் அடித்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கார் அதிவேகமாக வந்தது.   அதனால்தான் சாலையின் நடுவே இருந்த மரத்தில் மோதி கார் அப்பளமாக நொறுங்கியது என்று தெரிவித்துள்ளனர்.

அன்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக ஒரு வீடியோவை பதிவிட்டு, அவரை சேர்ந்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.  இது போவதற்கான நேரம். போகிறேன் என ஒரு காட்டுப்பகுதியில் நடந்து செல்வது போல ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.   நடந்து சென்ற அவர் கடைசியில் கையசைத்துவிட்டு சொல்வது போல் அந்த வீடியோ முடிகிறது.   இது ஏதோ தன் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து பதிவிட்டது போல இருப்பதால் அன்சியின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் ,ரசிகர்களும் தங்களது கருத்துக்களையும் அந்த வீடியோவை பார்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகள் அன்சியின் மரணச் செய்தியும் ,  கடைசியாக வெளியீட்டு வீடியோவும் துக்கத்தை அதிகப்படுத்த  அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அன்சியின் தாய் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.  ஆனால் குடும்பத்தினர் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறார்கள்.   அவர் தற்போது நலமுடன் இருப்பதாக குடும்பத்துடன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post