வெள்ள நீரில் தத்தளிக்கும் யாழ். கல்லுண்டாய்வெளி; உணவளிக்குமாறு மக்கள் கோரிக்கை - Yarl Voice வெள்ள நீரில் தத்தளிக்கும் யாழ். கல்லுண்டாய்வெளி; உணவளிக்குமாறு மக்கள் கோரிக்கை - Yarl Voice

வெள்ள நீரில் தத்தளிக்கும் யாழ். கல்லுண்டாய்வெளி; உணவளிக்குமாறு மக்கள் கோரிக்கையாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

யாழ்.  சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை அராலியில் மட்டும் 70 குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக பிரதேச வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பெய்து வரும் மழையால் கடல் அலையும்  வெள்ளமும் இணைந்து பிரதேசம் முழுவதும் நீர் நிரம்பியுள்ளதால் சமைப்பதற்கு இடவசதி இல்லாமையால் உண்ண உணவின்றி பொதுமக்கள் அதிகம் கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச்சுகாதார அதிகாரிகள் வந்து பார்த்து எங்களை முகாமுக்குச் செல்லுமாறு கூறினர்.  அவ்வாறு முகாமுக்குச் செல்வது என்றால் நவாலிக்குச் செல்ல வேண்டும். அதிக தூரத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள பாடசாலைகளில் தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு கொண்டு வைத்திருந்து விட்டு மூன்று நாட்களில் திரும்பினால் மீண்டும் வெள்ளம் வந்துவிடும் என்றும் கடந்த வருடம் இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலத்தில் மூன்று நாட்களில் திருப்பி அனுப்பிய பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்திற்கொண்டு இந்த வருடம் வெளியேறாமல் இங்கே தங்கியுள்ளோம் என்றும் அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் உணவு இல்லாமல் பெரும் சிரமத்துக்கு மத்தியில் இருப்பதால் முடிந்த உதவியை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வயதானோர் மற்றும் புற்று நோயாளர்கள் இருப்பதால் எங்களால் அவர்களை  நவாலிக்குக் கொண்டு செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post