வட கிழக்கில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் - புவியியல் துறை விரிவுரையாளர் தகவல் - Yarl Voice வட கிழக்கில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் - புவியியல் துறை விரிவுரையாளர் தகவல் - Yarl Voice

வட கிழக்கில் மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் - புவியியல் துறை விரிவுரையாளர் தகவல்வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜாதெரிவித்துள்ளார்.

தற்போதய காலநிலை மாற்றம் தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாகமுத்து பிரதீபராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்பொழுது சிலாபத்திற்கு 67 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு குறித்த தாழமுக்கமானது தற்போது  சிலாபத்திற்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post