ஈராக் பிரதமரின் வீட்டின் மீது ஆளில்லா விமானதாக்குதல் - Yarl Voice ஈராக் பிரதமரின் வீட்டின் மீது ஆளில்லா விமானதாக்குதல் - Yarl Voice

ஈராக் பிரதமரின் வீட்டின் மீது ஆளில்லா விமானதாக்குதல்ஈராக் தலைநகர் பக்தாத்தில் பிரதமர் முஸ்தபா அல் ஹடீமியின் வீட்டினை இலக்குவைத்து ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.

எனினும் பிரதமர் உயிர் தப்பியுள்ளார்.
தனது வீட்டின் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலின் போது தான் காயங்கள் இன்றி உயிர்தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகரின் பாதுகாப்பு வலயமான பச்சை வலயத்தில் உள்ள பிரதமரின் வீட்டின்மீதே ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா விமானதாக்குதல் காரணமாக பிரதமரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஆறுபேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல தூதரகங்கள் அரச அலுவலகங்கள் அமைந்துள்ள  பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலிற்கு எவரும் உரிமை கோரவில்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post