போராட்டத்தின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு - Yarl Voice போராட்டத்தின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு - Yarl Voice

போராட்டத்தின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அண்மையில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக மாத்தறை தெனியாய மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியரான வருணி அசங்கா அகாலமரணம் அடைந்தார்.

அவரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பளித்து அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமை வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் காலையில் 5 நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தி ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்குமாறே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post