பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கார்த்திகை வாசம் - மலர் முற்றம் - Yarl Voice பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கார்த்திகை வாசம் - மலர் முற்றம் - Yarl Voice

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கார்த்திகை வாசம் - மலர் முற்றம்




தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை கடந்த 20ஆம் திகதி (சனிக்கிழமை) திறந்து வைத்துள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மலர் முற்றத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்தியாளர்கள் காட்சிக்கூடங்களை அமைத்துள்ளனர். இம்மலர் முற்றத்தில் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் மலர்ச் செடிகளையும் மரக்கன்றுகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வழமைபோன்றே இந்த ஆண்டும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றமையால் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இம் மலர் முற்றத்தில் காட்சிக்கூடங்களுடன் பார்வையாளர்களுக்கு ஆரோக்கிய இலைக்கஞ்சி வழங்கும் மையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 இம்மலர் முற்றம் எதிர்வரும் 26ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை தினமும் காலை 8.30 மணிமுதல் முன்னிரவு 7.00 மணிவரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post