நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள மாட்டேன் - மைத்திரிபால சிறிசேன - Yarl Voice நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள மாட்டேன் - மைத்திரிபால சிறிசேன - Yarl Voice

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள மாட்டேன் - மைத்திரிபால சிறிசேனநான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளைக் கஷ் டத்தில் தள்ள மாட்டேன் என முன்னான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கமுன நகரில் தொடர் உணவு தவிர்ப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்திக்கச் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறித்து தற்போதைய அரசாங்கத்திடம் நான் எந்தளவுக்குக் கலந்துரையாடினாலும் அரசாங்கம் எனது கருத்துகுச் செவிமடுப்பதில்லை என்றும் கமத்தொழில் அமைச்சர் விவசாயத்தை அறிந்தவர் அல்ல என்றும் நான் பல முறை கமத்தொழில் அமைச்சருடன் விவசாயிகளின் உரப் பிரச்சினை பற்றிப் பேசியும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என விவசாயி ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி ஒன்றை எழுப்பிய போது,

நான் விவசாயிகளைக் கஷ்டத்தில் தள்ள மாட்டேன் என மைத்திரிபால பதில் வழங்கியுள்ளார். இயற்கை உரங்களை முறையாகப் பயன்படுத்த விவ சாயிகளை வழிநடத்துவதே எனது நோக்கமாகும். 

சேதனப் பசளை மூலம் நெல்லைப் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு படிப்படியாகப் பழக்கப்படுத்துவேன் என்றும் உலகில் எந்த நாடும் நூற்றுக்கு நூறு வீதம் சேதனப் பசளையைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா கூட சுமார் 50 வீதமே சேதனப் பசளை யைப் பயன்படுத்தி விவசாயத்தைச் செய்கிறது. நான் 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post