யாழ் பல்கலையில் தடைகளைத்தாண்டி ஓளிவீசிய கார்த்திகை தீபம் - Yarl Voice யாழ் பல்கலையில் தடைகளைத்தாண்டி ஓளிவீசிய கார்த்திகை தீபம் - Yarl Voice

யாழ் பல்கலையில் தடைகளைத்தாண்டி ஓளிவீசிய கார்த்திகை தீபம்தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடு பல்வேறு தடைகளையும் தாண்டி மாணவர்களால் பல்கலையில் இடம்பெற்றது.


இன்று மாலை 6.மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை மேற்க் கொள்வதற்கு வருகை தந்த நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய தடை விதிக்கப்பட்டது..


இந்நிலையில் பல்கலையில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும் தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டுதீபங்களை ஏற்றினர்.


இந்நிலையில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் வெளிநின்றமையை அவதானிக்கூடியதாக கருத்தோடு இராணுவ மோட்டார் வாகனங்களும் சென்றன கடந்த வருடம் ஒரு மாணவன் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார் பல்கலை மாணவர்கள் மீதான அடக்குமுறையை தட்டிக்கேட்க மாணவர் ஒன்றிய தேர்தலையும் நடாத்தாது பல்கலை நிர்வாகம் கொரோனாவை காரணம் காட்டி இழுத்தடிப்பு செய்து வருவதாக குழுமியிருந்த மாணவர்கள் தெரிவித்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post