யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான பெண்சந்தேக நபரை சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் - Yarl Voice யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான பெண்சந்தேக நபரை சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் - Yarl Voice

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான பெண்சந்தேக நபரை சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார்பொம்மைவெளியில் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பொம்மைபெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதை தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த நபர் நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2.40 கிராம் கெரோயின் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. குறித்த பெண் பல போதை பொருள் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர் என்பதுடன் ஏற்கனவே மேல் நீதிமன்ற வழக்கில் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர் என்பதுடன் பிணையில் உள்ள நிலையிலும் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பொலிஸ் குழுவினரால் யாழில் பிரதான போதைப்பொருள் சூத்திரதாரிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post