யாழில் விக்கினேஸ்வரனை சந்தித்த பிரதமரின் இணைப்பாளர் - Yarl Voice யாழில் விக்கினேஸ்வரனை சந்தித்த பிரதமரின் இணைப்பாளர் - Yarl Voice

யாழில் விக்கினேஸ்வரனை சந்தித்த பிரதமரின் இணைப்பாளர்



இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி.விக்னேஸ்வரனை கோவில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்...

விக்னேஸ்வரன் அவர்கள் தமது குடும்பத்துடன் நெருக்கமாக உறவு உள்ள ஒருவர். அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பாகவே இன்றைய தினம் அவரை சந்தித்துள்ளேன்.

அரசியல் ரீதியாக எந்த விடயமும் நாம் பேசிக் கொள்ளவில்லை ஒரு சினேக பூர்வமாகத்தான் நான் அவருடன் கலந்துரையாடினேன் எனவும் தெரிவித்தார்

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன்...

 தமது நீண்டகால நண்பர். சிநேகபூர்வமான
 சந்திப்பினை மேற்கொண்டார். எனினும் சிலர் நினைப்பார்கள் நான் அரசாங்கத்துடன் மாறிவிட்டேன் அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டேன் என்று சிலர் நினைப்பார்கள்.

 ஆனால் நாங்கள் அவ்வாறு ஒன்றும் பேசவில்லை நாங்கள் சினேகபூர்வமாக சில விஷயங்களை பேசினோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post