யாழில் பாடசாலை கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்த இந்திய தூதுவர் - Yarl Voice யாழில் பாடசாலை கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்த இந்திய தூதுவர் - Yarl Voice

யாழில் பாடசாலை கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்த இந்திய தூதுவர்வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் இந்திய  தூதுவர் ராகேஸ் நடராஜ் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது.

யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி மற்றும் தொழிநுட்ப அறிவை மேம்படுத்த வடமாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டலில் வன்னிஹோப்,அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரனையில் 08-11-2021 இன்று திங்கட்கிழமை இந்திய  துணைதூதுவர்  திறந்து அவர்களால் கணனி ஆய்வு கூடம் வைக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில்  வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், வன்னி ஹோப்  அவுஸ்திரேலியா மற்றும் யு.எஸ்.டி.எப் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள்  கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் , ஸ்டெப்ஸ் நிறுவன உத்தியோகத்தர்கள்   உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post