மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்! அச்சத்தில் மக்கள் - Yarl Voice மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்! அச்சத்தில் மக்கள் - Yarl Voice

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்! அச்சத்தில் மக்கள்யாழ்ப்பாணம் மாதகல்  குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு - 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது. 

அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை , கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். 

அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post