கிணற்றில் நீராடிய மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice கிணற்றில் நீராடிய மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice

கிணற்றில் நீராடிய மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
இன்று (06) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் - திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருந்தார்.

இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் அயலில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றி மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மூளாய் வைத்தியசாலையில் இருந்து குறித்த இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்போது அவரது உயிர் பிரிந்தது.

குறித்த மாணவனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மூளாய் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post