ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் பரவியிருக்கலாம்? - Yarl Voice ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் பரவியிருக்கலாம்? - Yarl Voice

ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் பரவியிருக்கலாம்?
தென்னாபிரிக்க பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபு ஏற்கனவே இலங்கைக்கு வந்திருக்கலாம் என ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆலோசகரும் சுகாதார நிர்வாகம் தொடர்பான வைத்திய நிபுணருமான பேராசிரியர் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி: அல்பா, பீட்டா, டெல்டா, வெவ்வேறான கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஒமிக்ரோன் கொரோனா தொற்றுக்கு தற்போது முகம் கொடுத்துள்ளோம். இந்த கொரோனா தொற்றானது உலகின் மிகவும் ஆபத்தானது என கருத்து வெளியாகியுள்ளது. இது உண்மையா?

பதில்: ஆம்

நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதன் முதலில் ஆபிரிக்க நாடான பொட்ஸ்வானாவில் ஒமிக்ரோன் வைரஸ் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

மூன்று நாட்களின் பின்னர் தான் தென்னாபிரிக்காவில் மூன்று பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஹொங்கோங்கில் கொ ரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆபிரிக்காவிலிருந்து சென்ற நபரே ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, செக்கோஸ்லோ வாக்கியா நேற்று காலை இந்தியாவிலும் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தால் டெல்டா, அல்பா திரிபு உலகின் மிகவும் பிரதான வைரஸ் அல்லது அவதான மிக்க வைரஸ் என அறிவிக்க ஒரு மாத காலம் எடுத்தது.

ஆனால், ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட இரண்டு வாரங்களிலேயே மிகவும் ஆபத்தான வைரஸ் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என இதன் மூலம் எமக்குத் தெரிய வருகிறது.

உலகின் அனைத்து நாடுகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

கேள்வி: இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குக் குறித்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவுடன் உடனடியாக  அந்நாடு முடக்கப்பட்டது தானே?

பதில்:  இல்லை. நாட்டின் எல்லைகளை இஸ்ரேல் மூடியது.  உள்ளே செல்லவும் முடியாது வெளியேறவும் முடியாது. ஆனால் நாட்டை முடக்கவில்லை.

நேற்று இங்கிலாந்து எல்லைகளை மூடியது அதே போன்று  நாளை அவுஸ்ரேலியா இதனை  மேற்கொள்ளலாம்.

வெளிநாட்டிலிருந்து உல்லாசப் பயணிகள் வரவில்லை என வெளிநாட்டு சுற்றுலாத்துறை துறை அமைச்சு தெரிவித்த போதிலும் வெளிநாட்டில் பணிபுரிவோர் இலங்கைக்கு வருகை தந்தார்களா? இல்லையா என்று உறுதியாகச் சொல்ல முடியாது? அதாவது சிம்பாப்பேயில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்த சரியாகத் தெரியவில்லை.

கேள்வி: குறித்த கொரோனா வைரஸ் தொடர்பாக அறிய இரு  வாரங்கள் போதுமா?

பதில்: இரண்டு வாரங்கள் போதாது. எனவே நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏனையவர்களை  பரிசோதனை செய்ய வேண்டும்.

நேற்றைய தினம் இந்தியாவில் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் எப்போது இந்தியாவுக்கு வந்தார்கள் என்பது குறித்த ஆராய வேண்டும்.

அவர்கள் ஐந்து ஆறு நாட்களுக்கு முன்னர் வந்திருந்தால் சமூகமயமாகியிருக்கலாம்.

இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்தால் குறித்த வைரஸ் நோயாளிகளின் உடம்பிலிருந்து தொற்றியிருக்கலாம்.

இந்நேரத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து வந்தவர்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாது இலங்கைக்கு வரும் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

நாட்டை இந்த நேரத்தில் முடக்குவது தீர்வாகாது.

நாட்டை முடக்குமாறு  தொழிற்சங்கங்களும்  நிறுவனங்களும் தெரிவித்து வருகின்றன.

அரசாங்கம், ஜனாதிபதி, வைத்திய அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் வழிமுறைகளின் நிலைமை குறித்து தெரிவிக்க வேண்டும்.

கேள்வி: தற்போது இலங்கையில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என நினைக்கிறீர்களா?

பதில்: சொல்ல முடியாது

ஒமிக்ரோன் வைரஸ் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல்  பரவிய நிலைமையில் இலங்கையிலும் பரவி இருக்கலாம்.

அதே போன்று தான் ஏப்ரல் மாதம் டெல்டா வைரஸ் அடையாளம் காணப்பட்டபோதிலும் பெப்ரவரி மாதம் பரவியிருக்கலாம் என நாங்கள் இதற்கு முன்னதாக தெரிவித்தோம்.

இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

கேள்வி: டெல்டாவை விட 100 க்கு 500 வீதம் பரவக் கூடியது. கொரோனா தடுப்பூசியைச் செலுத்தினால் 100க்கு 40 சதவீதம் குறைக்கக்கூடியது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்:ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கைப்படி புரோட்டின் அளவு டெல்டா வைரஸை விட இரு மடங்கு இருப்பதாகவும் பரவக் கூடிய தன்மை மிகவும் அதிகமாகவும் காணப்படுகின்றது.

உதாரணமாக தென்னாபிரிக்காவில் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி 322 பேர் ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டனர். 27 ஆம் திகதி 990 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதைக் காட்டுகின்றது.

கேள்வி: டெல்டா கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கும் குறித்த வைரஸ் தொற்றுமா?

பதில் :ஆம்

டெல்டா கொரோனா தொற்றாளர்களுக்கு மாத்திரம் அல்லது மூன்று கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியவர்களுக்கும் குறித்த கொரோனா தொற்றுக்குள்ளாகும் வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் 100 க்கு 30 வீதம் குறையக் கூடிய வாய்ப்புள்ளது.

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக விரைவாக பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து வருகை தரும் அனைவரையும் 24 மணித்தியாலங்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருந்து 24 மணித்தியாலங்களில் பி.சி.ஆர். பரிசோதனை செய்து 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும்.

கேள்வி: இலங்கை தீவு என்பதால் அனைத்து நாடுகளும் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுகின்றது. இதற் காரணம் என்ன?

பதில் : எல்லை  மீறுதல் மற்றும் சரியான விதிமுறைகளை பின்பற்றாமையே இதற்குக் காரணம்.

சரியான எல்லை வழிகளை மேற்கொண்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படாது.

கேள்வி: பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது இதற்கு சரியான தீர்வு என்ன?

பதில் : பாடசாலைகளை மூடுவதில்லை சரியான தீர்வு. பாடசாலைகளில் சரியான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

T T I (சோதனை செய்து, கண்டுபிடித்து, தனிமைப்படுத்தல்) முறைகளைப் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டும் . பாடசாலை மாண வர்கள் மத்தியில் இந்த முறையை மேற்கொள்ள அதிபர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும். தனது பாடசாலை மாணவர்களின் தகவல்களைத் திரட்டி ஒவ்வொரு பிரதேசத்திற்குரியான சுகாதார அதிகாரிகளின் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஒரு வாரத்துக்கு அல்லது இரண்டு வாரங்களுக்கு மாணவர்களின் தரவு களைத் திரட்டவேண்டும். குறித்த மாணவர்கள் யாருக்காவது கொ ரோனா நேர்மறை காணப்படுகின்றதா என்பதை அறிய வேண்டும்.

இலங்கையில் ஒமிக்ரோன் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது அதனைத் தடுக்க முடியாது.

நாட்டில் கொரோனா தொற்று ஏற்படுவதைத் தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு முகக் கவசங்களை அணிந்து கொள்ளுங்கள். 3 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post