அரசின் திட்டம் எமக்கு ஒத்துவராது ;அரசை விட்டு வெளியேற வேண்டும் - வாசுதேவ நாணயக்கார - Yarl Voice அரசின் திட்டம் எமக்கு ஒத்துவராது ;அரசை விட்டு வெளியேற வேண்டும் - வாசுதேவ நாணயக்கார - Yarl Voice

அரசின் திட்டம் எமக்கு ஒத்துவராது ;அரசை விட்டு வெளியேற வேண்டும் - வாசுதேவ நாணயக்காரஅரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது, பதினொரு சகோதர கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாம் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம் என ஜனநாயக இடதுசாரி முன்னணி யின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுவதாக இணைய சனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தாலும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளார். அவர் அரசியல் மேடையிலிருந்து விலக வேண்டும் என்றார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் எதிர்பார்ப் புகளை அழித்து வருவதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post