மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் இன்று தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.
அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரர் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து இராணுவத்தினர், போலீசார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தி பொலிஸ் உயரதிகாரிகள் வரும் தடுத்து வைத்திருந்தனர்.
எனினும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை செயதபின் அங்கிருந்து சென்றனர்.
இந்த அஞ்சலி நிகழ்வையடுத்து இராணுவத்தினர் வாகனங்களில் வந்து குவிக்கப்பட்டதால் சாவகச்சேரியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.
Post a Comment