மாநகர நலன் கருதி பாதீட்டை வெற்றி பெறச் செய்து முதல்வராக மணிவண்ணன் தொடர் வேண்டும்! தியாகேந்திரன் - Yarl Voice மாநகர நலன் கருதி பாதீட்டை வெற்றி பெறச் செய்து முதல்வராக மணிவண்ணன் தொடர் வேண்டும்! தியாகேந்திரன் - Yarl Voice

மாநகர நலன் கருதி பாதீட்டை வெற்றி பெறச் செய்து முதல்வராக மணிவண்ணன் தொடர் வேண்டும்! தியாகேந்திரன்யாழ்ப்பாண மாநகர சபையின் 2022 கான பாதீடு  வெற்றி பெற வேண்டும் என்பது தொடர்பில் கரிசனை செலுத்துபவர்களில் நானும் ஒருவன்.

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் ஆளுமை ஆற்றல் செயல்திறன் ஆகியவற்றில் முழு நம்பிக்கை கொண்டதன் விளைவாகவே யாழ் மாநகர சபையுடன் இணைந்து பல்வேறுபட்ட செயல்திட்டங்களை முன்னெடுதேன்.

தற்பொழுதும் முன்னெடுத்தும் வருகின்றேன். இந்நிலையில் யாழ் மாநகர சபையின் பாதீடு நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அப் பாதீ டு தோற்கடிக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் மணிவண்ணனை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் எவ்வாறு எனது செயல் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலுக்கு அடுத்ததாக நாவலர் கலாசார மண்டப புனரமைப்பு, மறவன் குள புனரமைப்பு,  என்பவற்றுடன் இன்னும் பல செயற்திட்டங்களினை முன்னெடுக்க உள்ள நிலையில்

இவ் விடயம் மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. இந்நிலையில் மாநகர முதல்வராக  மணிவண்ணன் நீடிக்காத பட்சத்தில் மாநகர சபையோடு இணைந்து என்னால் மேற்கொள்ளப்படுகின்ற செயல் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எனவே மாநகரத்தின் நலம் கருதி மாநகர மக்களால் தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் மக்களின் மனமறிந்து செய்யப்பட்டு பாதீட்டினை வெற்றி பெறச் செய்து மாநகர முதல்வராக மணிவண்ணன் தொடர்ந்தும் மாநகர மக்களுக்கு பணியாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி


வாமதேவா தியாகேந்திரன்
தியாகி அறக்கொடை நிறுவனம்,
நாவலர் வீதி நல்லூர் யாழ்ப்பாணம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post