மியன்மாரில் 30 பொதுமக்கள் படையினரால் படுகொலை - Yarl Voice மியன்மாரில் 30 பொதுமக்கள் படையினரால் படுகொலை - Yarl Voice

மியன்மாரில் 30 பொதுமக்கள் படையினரால் படுகொலை



மியன்மாரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சேவ் த சில்ரன் அமைப்பு தனது இரண்டு பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

படையினர் கார்களில் இருந்து இறக்கி அவர்களை  சித்திரவதை செய்தனர் கொலை செய்தனர் பின்னர் உடல்களை எரித்தனர் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

கயா என்ற மாநிலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள் குழந்தைகளும் உள்ளனர் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மீதான இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கையை கண்டித்துள்ள சேவ் த சில்ரன் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பணிகளிற்கு பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரு பணியாளர்கள் இந்த சம்பவத்தில் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களது வாகனம் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது என சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.

அப்பாவி பொதுமக்கள் மற்றும் எங்கள் பணியாளர்கள் மீதான தாக்குதலால் கடும் அச்சமடைந்துள்ளோம்,நாங்கள் மியன்மாரி;ல் உதவி அவசியமாக உள்ள மில்லியக் கணக்கான  சிறுவர்களிற்கு உதவி வழங்கும் மனிதாபிமான அமைப்பு என சேவ் த சில்ரன் தெரிவித்துள்ளது.

தாக்குதலின் போது எரியூட்டப்பட்ட வாகனங்களை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதிகளையே கொலை செய்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் கரேனி தேசிய பாதுகாப்பு அமைப்பு  பொதுமக்களே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post