யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் - Yarl Voice யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் - Yarl Voice

யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வெற்றிபெற்றது.

45 உறுப்பினர்கள் யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற நிலையில் 23 பேரின் ஆதரவு இருந்தால் வரவு செலவுத் திட்டம் நிறைவேறும் என்ற நிலையில், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 10 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 2 பேரும்  ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் வாக்களித்தனர்.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் 16 பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 பேரும் ஐக்கிய தேசிய கட்சியின் இருவரும் வாக்களித்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 பேர், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேர், ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் 10 பேர், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 பேர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 2 பேர், 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் என மொத்தமாக 45 உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 13 பேரில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக 10 பேரும் எதிராக 3 பேரும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post