சீனாவுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய நிலை வரலாம்! - Yarl Voice சீனாவுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய நிலை வரலாம்! - Yarl Voice

சீனாவுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய நிலை வரலாம்!



சீனத்தூதுவர் சக்கோட்டையில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்பதும் அவர் மன்னாரிலே 3ஆம் மணல் திட்டுவரை செல்வதும் ஒரு மிக ஆபத்தானது. சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் ஒரு துளியளவும் ஏற்க மாட்டோம் இவ்வாறு  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சீனத்தூதுவர் வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த பின் வாசுதேவா நாணயக்காரா வடக்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் காணிகளை வழங்கவுள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளார். இது தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
 ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கை அரசாங்கம் தற்போது தற்போது புதிய இராஜ தந்திரத்தை கையாள்கின்றது. அத்துடன் இந்தியாவை வெருட்டி கையாள்வதற்கு சீனா என்ன யுக்திகளை கையாளவேண்டுமோ அதற்காக ஈழத்தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு சீனாவை ஒரு கருவியாக இலங்கை பயன்படுத்தி தான் வடக்கையும் கிழக்கையும் பெரிய அளவில் பயன்படுத்தி இருக்கின்றது .
அதிலும் இலங்கைக்கு பல தூதுவர்கள் வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் சீன தூதுவர் வந்தால் சக்கோட்டையில் இருந்து இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்பதும் அவர் மன்னாரிலே மணல் திட்டுக்களைச் சென்று பார்ப்பதும் ஒரு மிக ஆபத்தானது.
தமிழர்களின் இருப்பை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு விடயத்தை சீன தூதுவர் கடந்த இரண்டு நாட்களாக செய்து இருக்கிறார்.
இதனை கௌரவ அமைச்சர் வாசுதேவ நாயக்க அவர்கள் நாங்கள் இந்தியாவிற்கும் நிலம் வழங்குவோம் சீனாவிற்கும் நிலம் வழங்குவோம் என்றால் எங்களுடைய நிலங்களை நீங்கள் யார்? யாருக்கு வழங்க போகிறீர்கள்?
நாங்களே இந்த மண்ணில் போராடி வாழ முடியாமல் இருக்கிற எங்களுடைய நிலங்களை நீங்கள் பல திணைக்கலத்தின் ஊடாகவும் இராணுவம் கடற்படை பொலீஸ் விமானபடை ஊடகவும் பறித்துக்கொண்டு இருக்கிற அதே நேரம் தொழில் முயற்சி என்ற போர்வையில் தமிழர்களுடைய சுயாதீனமான சுயநிர்ணய உரிமையை பறிக்கின்ற வேலையை அரசு பல இடங்களில் கையாழ்கிறது.
அதற்கு பல சோசலிசயம் பேசிய சமதர்மம் பேசிய வாசுதேவ நாயக்க போன்றவர்களை பயன்படுத்தி அவர்களுக்கு ஊடகவும் இந்த கருத்தை கொண்டு வந்து இருக்கிறது ஆகவே சோசலிசம் பேசியவர்கள் சீன கொம்யூனிசியம் பேசுகிறார்களா? அல்லது அவர்கள் எந்த வகையில் தமிழர்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
 சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் ஒரு துளியளவும் ஏற்க மாட்டோம்! நாங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல சீனாவிற்கும் எதிராகவும் நாங்கள் போராட வேண்டி நாட்கள் அண்மையில் வந்துள்ளதாகவே நாங்கள் உணருகின்றோம் ஆகவே அதற்கான நட வடிக்கையையும் நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post